Sunday, February 26, 2012

"Primer ஒரு குழப்பமான விளக்கம்"- E-Book !

நண்பர்கள் அனைவருக்கும் ஒரு இனிய செய்தி!!

நான் ப்ளாகில் எழுதிய "பிரைமர்" படத்துக்கான விளக்கத் தொடர்பதிவு,  ஹாலிவுட்ரசிகன், குமரன் போன்ற சக நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கமைய இன்று மின்நூலாக வெளியாகிறது!!

இந்த மின் நூலாக்கத்தில் எனது பங்கு சுத்தமாக ஒண்ணுமே இல்லை. எல்லாம் சக நண்பர் லக்கி லிமட்டின் கைவண்ணத்தில் 17 பக்க இதழாக வெளியாகிறது.. லக்கிக்கு ரொம்ப.. ரொம்ப.... நன்றி!!!

Friday, February 24, 2012

Primer (2004)- 5

எல்லா கன்பியூஷனுக்கும் காரணம், ரொபேர்ட்டோட பர்த்டே பார்ட்டிதான்!! திங்கட்கிழமை நடந்த முக்கியமான ஒரு சீன், அப்போ காட்டப்படாமல் இவ்வளவு லேட்டாகத்தான் படத்தில் காட்டப்படும்.

 அந்த சீன்... ஆரனும், அவனது நண்பனானன வில் என்பவனும் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆரன் வில்லை பார்ட்டிக்கு அழைத்ததோடு வரும்போது அவனது cousin-ஐயும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறான்..  வில்லின் cousin தான் ரேச்சலின் பழைய காதலன்!! அவனால்தான் அன்று பாட்டியில் கலவரமேற்படப்போகிறது. அதுனால தெரிந்தோ, தெரியாமலோ இந்தக் கலவரத்தில் ஆரனுக்கும் பங்கு உண்டுங்கற மாதிரி ஆயிடுச்சு!!

Tuesday, February 21, 2012

Primer (2004)- 4

வியாழக்கிழமை

வழக்கம்போல காலையில் பாக்ஸை ஸ்விட்ச்-ஆன் செய்துவிட்டு ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். அப்போது ஆரனுக்கு, காராவிடமிருந்து செல்போன் கால் வருகிறது.. ஆரன்:0 எடுத்துக் கதைத்தபின், அபே:0 அவனிடம், "இந்த செல்போனை எடுத்து வரவேண்டாமென"க் கூறுகிறான். ஆரன்:0 அதை கவனிக்காமல் எடுத்து வந்துவிடுகிறான்.

காலப்பயணம் செய்துவிட்டு இருவரும், டி.வியில் ஸ்போர்ட்ஸ் நேரடி-ஒளிபரப்பை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை காலையிலேயே பார்த்துவிட்டதால் இருவருக்கும் முன்கூட்டியே அடுத்து என்ன நடக்கும் எனத் தெரிந்து கூறக்கூடியதாக உள்ளது!

Friday, February 17, 2012

Primer (2004)- 3

நண்பர்களே, திங்கட்கிழமை ஒரே நேரத்தில் இரண்டு அபேக்கள் உலவியதால் அபே:0,  அபே:1 எனும் குறியீட்டுப் பெயர்களின் உபயோகம் அவசியமாக இருந்ததது. எனினும் அவை தற்காலிகமானவையே. 2.45ற்குப் பிறகு உலகத்தில் இருக்கப்போவது ஒரேயொரு அபேதான்.. அப்போ இந்த எண்களைப்போடுவதில் அவசியம் இருக்காது அல்லவா?

அது மட்டுமன்றி இனி இருவரும், ஒவ்வொருநாளும் ஒரு தடவை வீதம் காலப் பயணம் செய்யப் போகிறார்கள். அவர்களை அபே:2, அபே:3, அபே:4 என சுட்டுவது தேவையில்லாதது.

Thursday, February 16, 2012

Primer (2004)- 2

ஆரனும், அபேயும் கண்டுபுடிச்ச இந்த மெஷினுக்கு எந்தவொரு பெயரும் வைச்சதா தெரியலை. அவங்க அதை ஒரு டைம்-மெஷினாக உபயோகிப்பதற்காக, ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பெரிய மெஷினாக அதை விரிவாக்கிக் கொள்கிறார்கள். இப்போ விரிவான அந்த மெஷினை அவர்கள் படத்தில், Box என்று குறிப்பிடுவதால் நாமளும் அப்படியே அதை குறிப்பிடப் போகிறோம்..சரி, இப்போ இந்த box எப்படி வேலை செய்கிறது?

இந்த பாக்ஸினுள் நடைபெறும் கால-ஓட்டத்திற்கு A , B என இரண்டு முனைகள் இருக்கின்றன. ABக்கிடையிலான நேர வித்தியாசம் 1 நிமிடம் என எடுத்துக்கொண்டால்

Saturday, February 11, 2012

Primer (2004)- 1

வெறும் 7000டாலரைக் கையில வைச்சுகிட்டு, CG உதவியே இல்லாம, உங்களால ஒரு சயின்ஸ் -பிக்ஷன் படம் எடுக்க முடியமா?  கண்டிப்பாக முடியாதுதான்.. ஆனால் இந்த primer... யப்பா! ஹாலிவுட் சயின்ஸ் படங்களுக்கே ராஜான்னு சொல்லிக்கற மாதிரி ஒரு படம்.

சும்மா கதை இல்லீங்க.. நான் இதுவரைக்கும் பார்த்த படங்கள்லயே புரிஞ்சுக்கறதுக்கு ரொம்பவும் கஷ்டப்படக்கூடிய சிக்கலான கதை உள்ள படம். (நான் இன்னும் memento பார்க்கலை. ஸோ அந்தப் படத்தோட காம்ப்பேர் பண்ணி, எவ்வளவு குழப்பமான படம்னுல்லாம் சொல்ல முடியாது..)

Monday, February 6, 2012

The Illusionist (2010)





நல்லா தலைப்பை பார்த்துக்கோங்க.. இது நீங்க எல்லாரும் பார்த்திருக்க கூடிய, 2006ல் ரிலீசான The Illusionist கிடையாது 2010ல் வெளியான L'illusioniste அப்படீங்கற ப்ரெஞ்சு அனிமேஷன் படம். போன வருஷம் ஆஸ்கர்ல நாமினேட் ஆகி, டாய் ஸ்டோரி 3- கிட்ட தோத்துப் போச்சே... அதே படம்தான்!

பெயருக்குத் தான் ப்ரெஞ்சுப் படமே தவிர, இதை பார்க்குறதுக்கு உங்களுக்கு சப்-டைட்டிலே தேவையில்லை.. ஏன் உங்களுக்கு எந்தவொரு மொழியுமே தெரிஞ்சிருக்கத் தேவையில்லை!

Saturday, February 4, 2012

லீப்ஸ்டர் ப்ளாக் அவார்டு

ப்ளாக் ஆரம்பிச்சு இன்னும் முழுசா 2 வருஷமே ஆவலை. மாசத்துக்கு ஆவரேஜா 3,4 பதிவு.. அதுலயும் அப்பப்போ எஸ்கேப் ஆயி, ரொம்ப நாள் ரெஸ்டுக்கப்புறம் ரீ-என்ட்ரீ கொடுக்கறது.. மத்தவங்க போஸ்டை வாசிச்சு கமெண்டிடுவதில் ரொம்ப ஸ்லோ.. இப்படி வெட்டியாவே ப்ளாக் எழுதுற எனக்கும் இந்த அருமையான Liebster Blog Award-ஐ இந்தப் பதிவில் கொடுத்து உதவிய நண்பர் ஹாலிவுட் ரசிகனுக்கு என் உத்தியோக பூர்வமான நன்றிகள்!!!

உலக அளவில் இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் முகமாக அளிக்கும் விருதுதான் இந்த Liebster Award! விருதைப்பெறுவதற்கான தகமைகள்லாம் ரொம்பவே ஈஸி - 200க்கு குறைவான பாலோவர்ஸ் இருக்கனுமாம்.

Wednesday, February 1, 2012

Tree of Life (2011)

 இந்த இயக்குனர் "டெரன்ஸ் மலிக்" இருக்கிறாரே.. இவரு ஒரு பயங்கரமான ஆளு. ஒரு டாபிக்கை பற்றி நினைத்ததும் இவரது சிந்தனையில் உதிக்கும் எண்ணங்கள் அனைத்தும் சிறிதும் பிசகாமல் வெள்ளித்திரையில் விழ வேண்டுமாம்.. அப்போதுதான் அவர் திருப்தியடைவாராம். 1970கள்ல உலகத்துல உயிரங்கிகள் தோற்றம் பெற்றது பற்றி "Q"ங்கற பெயரில் ஒரு படத்தை எடுக்கலாம்னு திட்டமிட்டு வைத்திருந்தாராம்.. இந்தப்படம் அதே சாயலைக்கொண்ட, ஆனால் ஒரு சாதாரண குடும்பமொன்றைப் பற்றிய கதை..
Related Posts with Thumbnails