Saturday, March 31, 2012

J. Edgar (2011)

 அரசதுறை அதிகாரியொருவர் தனது டிபார்ட்மென்டில் புது ஆட்களை எடுப்பதற்காக 3 இளைஞர்களிடம் நேர்காணல் போல கேள்விகளைக் கேட்கிறார்..

"20ம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான நபர் யார்?"
1வது இளைஞன் - "ஜோன் மெக்கார்த்தி"
"மெக்கார்த்தி ஒரு சந்தர்ப்பவாதி, தேசாபிமானி அல்ல!"
அடுத்த நபரிடமும் இதே கேள்வி,
2வது இளைஞன் - "நீங்கதான் சார்.."
*உதடுவழி எட்டிப்பார்க்கும் புன்முறுவலை அடக்கிக் கொண்டு இருமுகிறார்.*
3வது இளைஞன் - "அவர் என்ன துறையைச் சேர்ந்தவர் என தெரிந்து கொள்ளலாமா?"
"அவரது துறை மேகங்களினிடையே..."
3வது இளைஞன் - "சார்ல்ஸ் லின்ட்பேர்க்"
*சிறிய புன்னகையுடன் 'ஆம்' எனத் தலையசைக்கிறார்*

Friday, March 23, 2012

A Monster in Paris (2011)

2011 "in Paris" தலைப்பைக் கொண்ட படங்களின் வருஷம் போலும்! நீங்க ஹாலிவுட் படங்களின் ரசிகரா இருந்தால், உங்களுக்கு Midnight in Paris பத்தி தெரிஞ்சிருக்கும்.. இந்த முறை ஆஸ்கரில் 4 பிரிவுகளக்கு நாமினேட் செய்யப்பட்டு ஒரு விருதை தட்டிச் சென்றது... அனிமேஷன் படங்களின் ரசிகராயிருந்தால் A Cat in Paris பற்றி ஓரளவாவது தெரிந்திருக்க வாய்ப்புண்டு. காரணம் அது சிறந்த அனிமேஷன் படத்துக்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த Monster in Paris?...

பாரீஸை மையமாகக் கொண்ட கதை என்பதாலோ என்னவோ படத்தின் ஆரம்பமே ரொமான்டிக் சீனாக இருக்கிறது!

Friday, March 16, 2012

Hugo (2011)

 ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்த நாளிலிருந்து, தேடித்தேடி கடைசியில் ஒருவழியாக பார்த்தே விட்டேன் ஹியூகோ படத்தை.. ஆனால் பார்த்த பின்பு இதுக்கு இவ்வளவு எதிர்பார்த்திருக்கத் தேவையில்லையே என்ற ஓர் எண்ணம் மனதில் ஓடுகிறது!

பாரீஸில் வாழும் ஹுயூகோ கப்ரெட் எனும் சிறுவன், இறந்து போன தந்தை தனக்கு கடைசியாக கொடுத்த ஒரேயொரு க்ளூவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி, இறுதியில் உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பிரபலத்தை மீண்டும் புகழுக்கு கொண்டு வரச் செய்வதே கதை.

Monday, March 12, 2012

Arthur Christmas (2011)

 கிறிஸ்துமஸ் சீசன் என்றாலே குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் விதவிதமான படங்களாக வந்து குவியும். அதில்அனிமேஷன் படங்களும் அதிகம். ஆனால் ஒரே டைப்பான கதைகளைக் கொண்டு எடுக்கப்படுவதாலும், டி.வி கார்ட்டூன் மாதிரி எடுக்கப்படுவதாலும் அவற்றில் அனேகமானவை இலகுவில் மறக்கப்பட்டு விடும். நான் பார்த்து அப்படி அமையாத, தரமான படம் இதுவரையிலும் Polar Express ஒண்ணு மட்டும்தான். இப்போ இந்தப் படமும் அந்த கேட்டகரிக்குள் வந்து சேர்ந்திருக்கிறது.

 2011 கிறிஸ்துமஸுக்கு ரிலீஸாகும் படத்துக்கு, 2010 டிசம்பரிலிருந்தே பில்டப் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். Cloudy with a chance of meatballs, smurfs போன்ற படங்களை எடுத்த "சோனி அனிமேஷன்" நிறுவனமும், Chicken Run, Flushed Away போன்ற படங்களை எடுத்த "ஆர்ட்மன் அனிமேஷன்" நிறுவனமும் கைகோர்த்திருப்பதால் படம் கலக்கலாக வெளிவந்திருக்கிறது!

Wednesday, March 7, 2012

Woman in Black (2012)


மூன்று சின்ன பெண் பிள்ளைகள், தங்கள் பொம்மைகளுடன் டீ கொடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.. திடீரென முன்று பேரும் திரும்பி ஒரே திசையில் அறையின் கதவைப் பார்க்கின்றனர்.. அவர்களது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.. ஏதோ நினைத்தவர்களாய், இயந்திரம் போல நடந்து சென்று அந்த அறையின் ஜன்னல்களுக்கு நேராக நிற்கின்றனர்... மூன்று பேரின் அளவில் முன்று ஜன்னல்கள்.. அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கின்றனர்!!! அப்படி அவர்கள் என்னதான் பார்த்தார்கள்??

Woman in Black-ஐப் போல எதிர்பார்ப்பைக் கிளப்பிய பேய்ப் படமெதுவும் சமீபத்தில் வந்ததாக ஞாபகம் இல்லை.. (Paranormal Activity 3ஐயும் சேர்த்துதான்..)

Monday, March 5, 2012

Public Enemies (2009)

 Federal Bureau of Investigation (சுருக்கமா FBI).... குற்றம் நடந்த இடத்துக்கு ஒரு மணித்தியாலம் தாமதமா வந்து, குற்றவாளியை தப்பிக்கவிட்டு "அம்போ"ன்னு பார்த்துக்கிட்டிருந்த ட்ரென்டை மாத்தி, குற்றவாளியோட அடுத்த நகர்வு என்னான்னு முன்னமே கண்டுபிடிச்சு, "டான்"னு அங்க போயி நின்னு துப்பாக்கியை அவன் முகத்துக்கு நேரா நீட்டுற ட்ரென்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. கைவிரல் ரேகை எடுக்குறதுலயிருந்து, டெலிபோன் காலை"டேப்" பண்னுறது, ஒருத்தன் எந்தெந்த கெட்டப்புகள்லயெல்லாம் உலாவலாம்னு போட்டோ எடுத்து காட்டுறது வரைக்கும் எல்லாமே இந்த FBI தந்த டெக்னீக்குகள்தான்..

 இதை வச்சுக்கிட்டுத்தான் ஏராளமான க்ரைம்-திரில்லர் நாவல்களும், படங்களும் வெளியாகின என்பதைக்கொண்டே இதன் உலகளாவிய தாக்கத்தை அளவிட்டுக்கொள்ளலாம்.. (இப்படியொரு முயற்சி வந்திருக்காவிட்டால் கேப்டனுக்கு பாதிப் படங்கள் குறைந்திருக்கும்! ஹும்..)
Related Posts with Thumbnails