Sunday, May 27, 2012

The Pirates! (2012)

 ஹாலிவுட்டில் ஸ்டாப்-மோஷன் அனிமேஷன் தொழில்நுட்பத்தை Aardman அளவுக்கு பயன்படுத்திய கம்பெனி வேறெதுவும் இருக்க முடியாது.. Chicken Run, Wallace and Gromit என்று அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தது மட்டுமல்லாமல், தொலைக்காட்சியில் creature comforts,  Shaun the sheep அனிமேஷன் தொடர்களை வெற்றிகரமாக ஓட்டிய பெருமை இதற்கு உண்டு!
 
கடந்த சில வருடங்களாக தனது தனித்துவப் பாணியை கைவிட்டு CG அனிமேஷன் போட்டுக்கொட்டிருந்த இக் கம்பனி, இந்தப் படத்தின் மூலமாக மீண்டும் பழைய ஆயுதத்தையே கையிலெடுத்திருக்கிறது!
அதுவும் கடைசியாக Arthur Christmas படத்தில் கூட்டுச் சேர்ந்திருந்த சோனி அனிமேஷன், இதிலும் கூட்டு சேர்ந்திருக்கிறது..

Monday, May 14, 2012

Coriolanus (2011)

 இத்தாலியின் ரோம் நகரமே கொந்தளிக்கிறது!! இவனையெல்லாம் நகர சபை உறுப்பினராக ஏற்க முடியாது... மக்களின் ஆதரவு கண்டிப்பாக இவனுக்கு கிடையாது!
இத்தனைக்கும் அவன் முக்கியமான இறுதிக்கட்டப்போரில் தனியாளாக நின்று எதிரிகளை ஜெயித்து, ரோம் நகரத்தையே காப்பாற்றி விட்டு வந்திருக்கிறான்... முகமெல்லாம் ஆறாத் தழும்புகள்!
விளைவு..."நீ இத்துடன் இந்த நகரத்தை விட்டே ஒதுக்கி வைக்கப் படுகிறாய்!"

Thursday, May 10, 2012

Ghost Town (2008)

அதாவது, "பேய் இருக்கா? இல்லையா?.... நம்பலாமா? நம்பப்படாதா?..."

இதுக்கு ஏன் பாஸ் இத்தன வாட்டி திரும்புறீங்க.. அதுக்கு அந்த சாமியாரே பரவால்லை போலிருக்கே..
நாமெல்லாம் பேய் மேலயே நம்பிக்கையில்லாமல் பலபல பேய்ப்படங்கள் பார்த்தவங்க.. ஆனாலும் இதுவரைக்கும் பேய்களை மையமா வைச்சு வந்த முழு நீள ஹாலிவுட் காமெடிப் படம் எதுவும் பார்த்ததில்லை. :( கடைசியாக அந்தக் குறையைப் போக்கிக்க இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.. உதவியது மட்டுமல்லாமல், வயிறுகுலுங்கச் சிரிக்கவும் வைத்திருக்கிறது!
Related Posts with Thumbnails