Friday, August 10, 2012

Caesar Must Die (2012)

 அப்பாடி, முதன் முதலா அடுத்தடுத்து ரெண்டு (ஆங்கிலமல்லாத) வேற்றுமொழிப்படங்களைப் பற்றி எழுதுறேன்.. எனக்கே வித்தியாசமாப் படுது.. நண்பர்களே இந்தமுறை பார்க்கப்போவது Cesare deve morire  எனும் இத்தாலியன் படம்.. இது முழுக்க முழுக்க இத்தாலி ஜெயில் கைதிகள் சம்பந்தப்பட்ட படமாக்கும்..

ஜெயில் கதை என்றவுடனே கைதிகளின் ஃபிளாஷ்பேக்கை காட்டி sympathy வாங்கும் படம் என்றோ, ஜெயிலிலிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் படமென்றோ எண்ண வேண்டாம்..
இத்தாலியிலுள்ள உயர் பாதுகாப்பு சிறைக்கைதிகள் சிலருக்கு, அடுத்த மாசம் நடக்கவுள்ள charity நிகழ்ச்சியொன்றில் "ஜுலியஸ் சீசர்" நாடகம் போடுவதற்கு வாய்ப்புக்கிடைக்கின்றது.. அந்த நாடகத்துக்கு இவர்கள் எப்படித் தயாரானார்கள் என்பதும், நாடகம் வரவேற்பைப் பெற்றதா என்பதுமே இந்தப் படத்தின் கதை!

Coriolanus படத்தில் ஷேக்ஸ்பியரின் கதையை, சமகால நிகழ்வுக்கு உவமைப் படுத்திக்காட்டியிருப்பார்கள்.. இதுல ஷேக்ஸ்பியரின் கதையையே சமகால மனிதர்கள் நடிப்பதாக காட்டியிருக்கிறார்கள்.. உங்களுக்கு முதல் படம் பிடிச்சிருந்ததுன்னா, இந்தப் படமும் நிச்சயம் பிடிக்கும்..

இதுவரை நேரத்தை எப்படிக் கடத்துறதுன்னே தெரியாம தவிச்சுக்கிட்டிருந்த கைதிகளுக்கு, ஒரு மாற்றமாக இந்த நாடக வாய்ப்பு வந்து சேர்வதால் முழு ஈடுபாட்டுடன் இறங்குகிறார்கள்..  நடக்கும் போதும், சாப்பிடும்போதும், தூங்கும்போதும் கூட பேசி, நடித்துப் பழகுகிறார்கள்.. இவர்களது டெடிககேஷனைப் பார்க்கும்போது, நான் பள்ளிக் காலத்தில் நாடகம் போட்ட நேரங்கள் ஞாபகம் வரவும் கூனிக்குறுகிப்போனேன்..

நடிக்கறது ஒருவிதம்னா, நடிக்க கத்துக்கற மாதிரி நடிக்கிறது இன்னொரு விதம்.. இங்க கிட்டத்தட்ட எல்லாருமே கத்துக்கற மாதிரி நடிச்சதால, யாரு அண்டர்-ஆக்டிங், யாரு ஓவராக்டிங் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமே கிடையாம போயிருச்சு! ஆனாலும் புரூட்டஸாக நடிப்பவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது..

படத்தோட ஒளிப்பதிவாளரையும் பாராட்டியே ஆகனும்.. பெருசா லொக்கேஷன் எதுவுமில்லை.. முழுக்க முழுக்க சிறைச்சாலைக்குள்ளேயும், நாடக அரங்கத்துக்குள்ளேயும் தான் காட்சிகள்.. மருந்துக்குக் கூட இயற்கைக்காட்சிகள் கிடையாது (ஒரேயொரு இயற்கைச்சித்திரப் படம் ஜெயில் சுவரில் தொங்கும்). வெறுமனே basic கோணங்களையும், காமிரா அசைவுகளையும் கொண்டே நம்மைக் கவர்கிறார்! அதேபோல் இவர்கள் சிறைச்சாலையில் இருக்கும் காட்சிகள் கறுப்பு -வெள்ளையிலும், மேடையில் நாடகம் நடிக்கும் காட்சிகள் கலரிலும் காட்டப்பட்டு, கைதிகளின் மனநிலையை திரையில் பிரதிபலிக்கின்றன.. இதுபோன்று பல இடங்களில் அவர்களது மன, உள மாற்றங்களை "குறியீடாக்கி"யிருக்கிறார்கள் போலப் படுகிறது.. ஆனால் அனைத்தையும் கண்டுகொள்ள எனக்கு முடியாது..

படத்தின் வசனங்கள்னு பார்த்தீங்கன்னா 80% ஷேக்ஸ்பியரின் வசனங்கள் தான்.. அதுவும் கதையோடு தொடர்புடைய இத்தாலியன் மொழியிலேயே பேசப் படுவதால் கம்பீரமாக தனித்து தெரிகின்றன.. (சீசரைக் கூட "சேஷரே"ன்னு தான் உச்சரிப்பாங்க.. வித்தியாசமா, அழகா இருக்கும்)
ஆனால் மீதியுள்ள சாதாரண வசனங்களும் நம் கவனத்தை ஈர்ப்பதாகவே எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.. ஒரு தடவை கைதிகளுக்கும், ஜெயில் ceilingற்கும் இடையிலான உறவை ஒருத்தர் விபரிப்பார்.. தனிமையின் கொடுமையை கவிதை வடிவில் வர்ணிக்கும் சீன் அது! இன்னொரு சீனில் ஒரு கைதி மற்றையவர்களைப் பார்த்து நேரத்தை வீணடிக்காம டக்குனு ஒத்திகையை தொடங்குவோம்னு சொல்லுவாரு.. அதுக்கு பதில் இப்படி வரும்.. I've been living behind these walls for 20 years and you're telling me "Not to waste time"..

அப்படியே கலைஞர் டி.வியில கிட்டத்துல Shawshank Redemption பார்த்த ஞாபகம் வந்துருச்சு! ஒருவாட்டி ஏற்கெனவே படத்தை பார்த்திருந்தாலும், தமிழில் பார்க்கும்போது ஏனோ படம் ரொம்ப எளிமையாத் தெரிஞ்சுச்சு..
ஒவ்வொரு சனிக்கிழமையும் ராத்திரி 10.30க்கு நல்ல ஹாலிவுட் படங்களாக தெரிவுசெஞ்சு தமிழில் போடுறாங்க.. என்னோட டேஸ்டுக்கு எந்தவிதத்திலும் ஒத்துவராத கலைஞர் டி.வியை நான் விரும்பி பார்க்குற டைம் இதுதான்.. படங்களுக்கு Narration பண்ணுற சீன்களில் பேசும் குரல் என்னை மிகவும் கவர்ந்தது.. 1 மணி வரைக்கும் விடிய விடிய இருந்து தமிழில் ஹாலிவுட் படம் பார்க்கும் சுகம் அலாதியானது.. ட்ரை பண்ணாதவங்க இருந்தா ட்ரை பண்ணிப் பார்க்லாம்! இன்னிக்கு The towering inferno படம்.. (நான் ஒண்ணும் கலீஞர் டி.விக்கு வெளம்பரம் பண்ணலிங்கோ!)

படத்தின் கடைசியில் இவர்கள் வருங்காலத்தில் என்னவானார்கள் என்பது பற்றிக் காட்டப்படுகிறது.. அதிலும் இருவர் புத்தகம் எழுதினார்கள் என புத்தகத்தின் பெயரை வேறு காட்டுகிறார்கள்.. ஒருவேளை இது உண்மைச் சம்பவம்தானோ என கூகுளில் தேடினால் எல்லாம் இத்தாலியனில் வருகிறது.. அப்படியே ஆராய்ச்சியை அந்தரத்தில் விட்டுட்டு போயிட்டேன்.. விஷயம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அறியப்படுத்துக!

இந்தப்படம் 62வது சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, "தங்கக் கரடி" விருதை தட்டிச் சென்றது.. இந்த விருதின் முன்னைய வெற்றியாளர்களான Bal(2010), A Seperation(2011) உலகளவில் கிரிட்டிக்கல் ரீதியாக பெரிதும் வரவேற்புக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது..

படத்தின் நீளம் மிகக்குறைவு.. 76 நிமிடங்களே தான்! ஆனாலும் திரைக்கதையில் பெரும்பாலும் வேகம் இருக்காது.. ஆகவே ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.. ஏனையவர்கள் ஒரு மணிநேரம் ஒதுக்கி படத்தை தாராளமாகப் பார்க்கலாம்..

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 17
இசை = 07
கதை+திரைக்கதை = 13
கலை+ஒளிப்பதிவு =17
இயக்கம் = 17

மொத்தம் = 71% மிக நன்று!
Caesar Must Die (2012) on IMDb

31 comments:

  1. ஒரு புதிய விதயாசமான படத்த அறிமுகம் செஞ்சி இருக்கீங்க. கண்டிப்பா பார்கிறேன் நேரம் கிடைக்கும் பொது.

    //////கலைஞர் டி.வியில கிட்டத்துல Shawshank Redemption பார்த்த ஞாபகம் வந்துருச்சு! ஒருவாட்டி ஏற்கெனவே படத்தை பார்த்திருந்தாலும், தமிழில் பார்க்கும்போது ஏனோ படம் ரொம்ப எளிமையாத் தெரிஞ்சுச்சு..///////
    உண்மையான வார்த்தை.... படத்தோட தரம் கண்டிப்பா குறைகிறது......... ஆனால் சில வசனங்கள் பார்பதற்கு சம ஜாலியா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தரம் குறையுதோ இல்லையோ.. ரொம்ப நெருக்கமா ஃபீல் பண்ண முடிஞ்சுது.. அதைத்தான் "எளிமை"ன்னு சொன்னேன்..

      படம் பார்த்து உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்க நண்பா!

      Delete
  2. கலைஞர் டிவியில் படம் பார்ப்பது உனக்கு பிடித்திருக்கிறதா? சாமீ என்ன விடுடா !சின்ன வயதில் தமிழில் ஆங்கில படம் பார்க்க விரும்பினாலும், இப்பெல்லாம் இவய்ங்களோட மொழிபெயர்ப்பே அந்த படத்தோட உண்மையான உணர்வை கெட்டுத்து விடுறதா ஃபீல் பண்ணுறேன். அதிலயும் அன்னிக்கு 'மார்ஷ் அட்டேக்"னு ஒரு படம் பாத்தேன். ராசா.. முடியல.. அந்த பாடுகளையே ஒரு பதிவா போடலாம்னு ஐடியாவில இருக்கேன். முன்னெல்லாம் எப்போ பாரு சைனிஸ் படமா போட்டு சாவடிப்பாய்ங்க , இப்போ மொழிபெயர்ர்பு.. நல்லா பெயர்க்கிறாய்ங்கடா மொழிய...

    ReplyDelete
    Replies
    1. உன் நேரம் நீ "மார்ஸ் அட்டாக்ஸ்" பார்த்தே.. என் நேரம் நான் "ஷாஷாங் ரிடெம்ஷன்" பார்த்தேன்..
      //ராசா.. முடியல.. அந்த பாடுகளையே ஒரு பதிவா போடலாம்னு ஐடியாவில இருக்கேன்.//
      போடனும் தல.. கண்டிப்பா போடனும்!

      Delete
    2. மச்சி, Mars Attacks இங்க்லீஷ்ல இன்னும் கொடுரமா இருந்தது இருக்கும்...

      Delete
    3. காப்பாத்தினடா கந்தா...

      Delete
  3. ஆங்.. அப்புறம் உன்னோட பதிவு வழமை போலவே மொக்கையா இருக்கு. அதிலும்

    ////அதேபோல் இவர்கள் சிறைச்சாலையில் இருக்கும் காட்சிகள் கறுப்பு -வெள்ளையிலும், மேடையில் நாடகம் நடிக்கும் காட்சிகள் கலரிலும் காட்டப்பட்டு, கைதிகளின் மனநிலையை திரையில் பிரதிபலிக்கின்றன../// இந்த இடம் மரண மொக்கை.

    ஆங் வேறென்னமோ சொல்ல நெனச்சேனே ஆங்..... ///I've been living behind these walls for 20 years and you're telling me "Not to waste time"../// இந்த ஸ்பானிஷ் வசனம் கூட செம மொக்கை தான். அப்புறம் நான் போய்ட்டு வாறேன்!

    ReplyDelete
    Replies
    1. யாருப்பா எழுதறது.. கிசோகரா? மொக்க மொக்க மொக்கையா??

      Delete
    2. உனக்கு நான் கொமன்டு போடுறதே பெரிய விசயம், இதில அந்த மாமேதையும் கொமன்டு போடணுமா? இதெல்லாம் பேராசை!

      Delete
  4. புதுசா ஒரு படத்த அறிமுகப்படுத்தி வச்சிருக்கீங்க... நிச்சயம் பாத்துடுறேன்!

    // நடிக்கறது ஒருவிதம்னா, நடிக்க கத்துக்கற மாதிரி நடிக்கிறது இன்னொரு விதம்.. // ஆஹா.. எப்படி பாஸ் உங்களால மட்டும் இப்படி? :-)

    ReplyDelete
    Replies
    1. அது ஏதோ கன்ஃபியூசன்ல வர்றது.. படம் பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க பாஸ்!

      Delete
  5. //ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள்//

    சத்தியமா இல்ல மச்சி.. விமர்சனம் ஓகே

    ReplyDelete
    Replies
    1. இல்லைன்னா ஃபீல் ஃப்ரீ.. வருகைக்கு நன்றி

      Delete
  6. அற்புதமான படத்தை தேர்வு செய்து எழுதி உள்ளீர்கள்.நன்றி.
    டிவிடி கிடைத்ததும்...பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  7. ரைட்டு ... ஜே.சி உலக ஹாலிவுட்ல இருந்து உலகசினிமா லெவலுக்கு வளர்ச்சியடைஞ்சிட்டாறு. உலகசினிமாரசிகன் II ஆக வாழ்த்துக்கள்.

    //இதுபோன்று பல இடங்களில் அவர்களது மன, உள மாற்றங்களை "குறியீடாக்கி"யிருக்கிறார்கள் போலப் படுகிறது..//

    அட ... இப்பவே மாற்றம் ஆரம்பிச்சிட்டுது போல இருக்கே? :-)

    ReplyDelete
    Replies
    1. நண்பா.. இதுல்லாம் உனக்கே ஓவரா இல்லையா?? நமக்கு ஹாலிவுடே ஒழுங்கா வரமாட்டேங்குது..
      அந்த குறியீடு கேஸ் எனக்கு இருக்குங்கற ரீதியிலதான் தெரியும்.. என்னன்னுல்லாம் தெரியாது!

      *ஹாலிவுட்ரசிகன் II தான் இப்போதைக்கு மை இலக்கு.. எப்பூடி?

      Delete
    2. நீங்கல்லாம் நல்லா வருவீங்க !!!

      Delete
  8. நெட்டுல கிடைச்சா கண்டிப்பா பார்க்கிறேன் தல....அப்புறம் உங்க சின்ன வயசுல இது எல்லாம் வேற நடந்து இருக்கா...
    //இவர்களது டெடிககேஷனைப் பார்க்கும்போது, நான் பள்ளிக் காலத்தில் நாடகம் போட்ட நேரங்கள் ஞாபகம் வரவும் //
    அப்புறம் தல.. கலைஞர் டிவியில் அவங்க உருப்படியா டப்பிங் பண்ணுன படம்னா அது " Shawshank Redemption" டப்பிங் பண்ணுன ஆளு MS.பாஸ்கர்ன்னு நினைக்கிறன், அதனால தான் படம் ரொம்ப நல்லா வந்து இருக்கும்..
    முக்கவாசி படத்தை அவனுங்க ரொம்பவே கொதறி வச்சுருவாங்க..

    ReplyDelete
    Replies
    1. ஆமா பாஸ்.. ஒரு சில நாடகங்கள் (இங்கிலீசுல ஒண்ணே ஒண்ணு.. A Christmas Carol) போட்டுருக்கேன்!

      நீங்க இப்ப சொல்லும் போதுதான் க்ளிக்காவுது.. Morgan Freeman வாய்ஸ்.. அது எம்.எஸ்.பாஸ்கரே தான்! தேங்கஸ்!!

      Delete
  9. கேள்வி பட்டதே இல்ல.., Golden Bear வாங்கி இருக்கா அதுக்காகவாது பாக்கனும் தல :)

    ReplyDelete
    Replies
    1. நானும் Golden bear லிஸ்டை தேடப்போய்த் தான் இந்தப் படத்தைப் பத்தி அறிஞ்சுக்கிட்டேன்.. படத்தை பாருங்க.. வருகைக்கு நன்றி!

      Delete
  10. உங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும், முகவரி கீழே இணைத்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_16.html

    ReplyDelete
  11. Nice review ... I will try to download and see... Visit my blog also..
    My site..
    http://varikudhirai.blogspot.com

    ReplyDelete
  12. நல்ல விமர்சனம்...

    (வலைச்சரம் மூலம்) உங்கள் தளத்திற்கு முதல் வருகை என்று நினைக்கிறேன்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கம், கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.. தொடர்ந்தும் இணைந்திருங்கள்!

      Delete
  13. ஹாலி தல..நோட் பண்ணிக்கிட்டேன். உங்களின் மூலமாக தான் Coriolanus பார்த்தேன்..மனுஷன் நடிப்பு பின்னியிருக்காரு, அடுத்த Warriors of the Rainbow (2011)ரெடியாகி இருக்கிறது. நீங்கள் இப்படி பல மொழி படங்களை பார்த்து எங்களுக்கு நல்லாசி வழக்க வேண்டும் ;)

    ReplyDelete
    Replies
    1. கொரியோலேனஸ் பார்த்ததற்கும், அடுத்து பார்க்கப் போவதற்கும் மொதல்ல பெரிய தேங்க்ஸ் தல!
      //நீங்கள் இப்படி பல மொழி படங்களை பார்த்து எங்களுக்கு நல்லாசி வழக்க வேண்டும் ;)//
      நானே ஹாலிவுட் படம் பார்க்குறதுக்கு டைம் இல்லாம தவிக்கிறேன் தல :)
      இதுல உலக சினிமாவையும் தேடிப்புடிச்சு, சப் டைட்டிலோட பார்த்து விமர்சனம் எழுதுறதுக்குள்ள விடிஞ்சுடும்..
      ஆனா நான் ரெக்கமண்ட் பண்ணியும், நீங்கல்லாம் படம் பார்க்கறீங்கன்னா, இன்னம் நிறைய வேற்று மொழிப் படங்களை எழுத ஆவலாயுள்ளேன்!

      Delete

Related Posts with Thumbnails