Thursday, August 30, 2012

Wild Bill (2012)

To Kill a Mockingbird, Godfather, Big Fish, Road to Perditionனு தொடங்கி Lion King, Finding Nemo வரைக்கும் காலங்காலமா எத்தனையோ விதமான தந்தை-மகன் உறவை எடுத்துக் காட்டும் படங்களைப் பார்த்து வருகிறோம்? இதுவம் அதே டைப் தான்.. ஆனா கொஞ்சம் வேறுபட்டது. அதாவது 'இவனுக்கு தந்தையாக இருக்கத் தேவையில்லை' என நினைக்கும் ஒரு தந்தைக்கும், 'இவருக்கு மகனாக இருக்கக்கூடாது" என்று நினைக்கும் ஒரு மகனுக்கும் இடையிலான உறவை எடுத்துக் காட்டும் ஒரு படம்!

இது மேலே சொன்ன படங்கள் அளவுக்கு 'கிரேட்' படம் இல்லை.. ஆனால் உங்களை கவரக்கூடிய படம்!

பில் ஹேவார்ட் என்கிற சிறைக்கைதி 8 வருட ஜெயில் வாழ்க்கைக்குப்பின் பரோவலில் வெளியே வருகிறான்.. கிளம்பி வீட்டிற்கு வரும் பில்லுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.. அவனது மனைவி அவன் சிறைக்குச் சென்ற சிறிது காலத்திலேயே அவனது இரு ஆண்பிள்ளைகளையும் தனியே விட்டு வேறொரு வாழ்க்கை தேடிச் சென்றிருக்கிறாள்! யாரும் உதவிக்கரம் நீட்டாமல் தவித்து நின்ற சமயத்தில் மூத்தவன் டீன் "இனி எங்களுக்கு யாரும் தேவையில்லை" என முடிவெடுத்து, கட்டுமானத் தொழிலில் உதவி வேலைகளுக்குச் சேர்ந்து, கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தம்பி ஜிம்மியையும் படிக்க வைக்கிறான்... (பலவாட்டி கேட்ட கதை மாதிரி இருக்குமே!)
தந்தையைக் கண்டதும் கோபமடையும் பெரியவன் டீன், திட்டி வீட்டை விட்டுத் துரத்த முயற்சிக்கிறான்.. பில்லுக்கும் தன்னால் ஒரு தந்தைக்கான கடமைகளை செய்துகொண்டிருக்க முடியாது என்று சிறுவர்களை அவர்களது பாட்டிலேயே விட்டுச் செல்லும் மனநிலையிலேயே இருக்கிறான்.. ஆனால் பில்லின் பரோவல் முடியும் வரை நன்னடத்தையை பரிசோதிக்க அதிகாரிகள் அடிக்கடி செக் செய்து வர இருப்பதாலும், 'தந்தையும் தாயும் இவர்களோடு இல்லை' எனத் தெரிந்தால் சிறுவர்களை சிறுவர் வளர்ப்பு மையங்களில் சேர்க்கக் கூடும் என்பதாலும், வேறு வழியின்றி சில மாதகாலத்துக்கு தகப்பனும், மகன்களும் சேர்ந்து வாழ உடன்படுகிறார்கள்..

இதே நேரம் பில் முன்பு வேலை பார்த்த போதை மருந்துக் கடத்தல் கும்பலின் ஆட்கள், பில் போகும் வழியெல்லாம் பின் தொடர்ந்து அவனை திருப்பவும் தொழிலுக்கு வருமாறு கேட்கின்றனர்.. ஜெயில் தந்த அனுபவங்களால் சுதாரித்திருந்த பில் 'சூடுகண்ட பூனையாக' அவர்களை விட்டு ஒதுங்கி ஒதுங்கியிருக்கிறான்.. ஆனால் அவர்கள் பில்லைப் பார்க்கும் போதெல்லாம் கிண்டல் செய்து தொந்தரவு செய்கிறார்கள்..
வீட்டில் சும்மா இருந்து போரடிப்பதால் 6ம் வகுப்பில் படிக்கும் சின்ன மகன் ஜிம்மியை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விடும் வேலையைப் பொறுப்பேற்கிறான். முதல் தடவை ஸ்கூலுக்கு கொண்டு போய் விடும் போது, வகுப்பாசிரியை பில்லை சந்தித்து ஜிம்மி இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் குழப்படி செய்வதாகச் சொல்கிறாள்.. "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா" என்று அதைக் கணக்கில் கொள்ளாமல் விடுகிறான்.. ஹாட்-வீல்ஸ் வாங்கிக் கொடுப்பது, கடதாசி விமானம் செய்து விட சொல்லிக் கொடுப்பது என சில நாட்களிலேயே பில்லும், ஜிம்மியும் மிக நெருக்கமாகிவிடுகின்றனர்.. தந்தை தொடர்ந்தும் தங்களுடனேயே இருக்க வேண்டுமென டீனிடம் ஜிம்மி சொல்லி வருகிறான்.. இது டீனுக்கு எரிச்சலையே ஏற்படுத்துகிறது..

இதே வேளை பில்லைத் தொடர்ந்து வந்த 'கெட்ட' கேங், ஜிம்மியைப் பார்த்து அவனை, அவனது வகுப்புத் தோழர்களைக் கொண்டே மெல்ல தங்களுடன் இழுத்துக் கொள்கிறார்கள்.. சிகரட் அடிப்பதில் தொடங்கி, இரவில் போதை மருந்துப் பாக்கெட்களைக் கடத்துவது வரை அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.. பில்லுக்கும் ஒருநாள் இந்த விஷயம் தெரியவருகிறது...
பில்லின் ரியாக்ஷன் எப்படி? ஜிம்மியை அவர்களிடமிருந்து மீட்க முடியுமா? சிதைந்த குடும்பம் மறுபடி சேர வழியுண்டா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்க..

பிரிட்டிஷ் படமான இது 75ற்கும் மேற்பட்ட படங்களில் உதவிக் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த டெக்ஸ்டர் பிளெட்சரின் இயக்குனராகவும், எழுத்தாளராகவும் முதல்தடவை அவதாரம் எடுத்திருக்கும் படம்.. சும்மா சொல்லக்கூடாது.. கைதேர்ந்த இயக்குனர்களைப் போல் படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் இறுதியில் இப்படம் அவரது தந்தைக்கு சமர்ப்பணமென காட்டப்படுகிறது. (தன்னோட சொந்தக் கதையைத்தான் படமா எடுத்திருப்பாரோ?)

பில்லாக சார்லி க்ரீட்-மைல்ஸ்.. இவரு இதுவரைக்கும் நிறைய படங்கள்ல செக்கன்டரி ரோல்கள்ல நடித்திருக்கிறார்.. பிரம்மாதமாக நடிப்பார். ஆனாலும் பாத்திரம் சிறியதென்பதால் இவரது திறமை பலதடவை கணக்கெடுக்கப் படாமலே போய்விட்டிருக்கிறது.. அதனால் தனக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இந்த பில் கதாப்பாத்திரத்தை முழுதாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.. இந்த நடிப்பை எப்படி விபரிப்பது எனத் தெரியவில்லை.. சுத்தியிருப்பவர்களைப் பற்றி கவலைப்படாம பெரிய பெரிய தப்புக்களை அசால்ட்டா செய்த ஒரு கெட்டவனுக்கு, தவறை உணர்ந்து திருந்திய பின் குற்ற உணர்ச்சிகள் எப்படி அவனை மேலிடுகின்றன என்பதை அருமையாகக் காட்டுவார்.

தனது மூத்த மகனுக்கு பிறந்தநாள் பரிசு அளிக்கும் போதும் (பரிசு என்ன என்பதை படத்தில் கண்டு களிக்க. செம சாமெடியான சீன் இது!), 4 வயசுப் பையன் கிட்ட ரோட்டுல திட்டு வாங்கும் போதும் ரசிக்க வைக்கிறார். இவரது நடிப்பு ஆழத்தை அளவிட கிளைமேக்ஸ் சீன் ஒன்று போதும்.. மொத்தமா சொல்லனும்னா நான் பார்த்த அளவில் மனதோடு ஒன்றக்கூடிய மூவி காரக்டர்களில் இந்த பில்லும் ஒருவன்!

டீனாக நடித்திருப்பது "நார்நியா -3"ல் eustace கதாப்பாத்திரமாக நடித்திருந்த வில் போல்ட்டர்! பையன் அதுக்குள்ள நல்லா வளர்ந்துட்டாப்ல.. முகம் மட்டும் அப்படியே வில்லத்தனமான லுக்கிலேயே இருக்கு.. உணர்ச்சிவசப்படும்போது ரசிக்கும் படியாக நடிக்கிறார்!
இரண்டாவது மகனைச் சார்ந்தே கதை நகர்ந்தாலும், படத்தின் உயிர்நாடியாய் விளங்குவது இந்த இருவரினதும் உறவுநிலைதான்.. வெறுமனே இந்த இருகதாப்பாத்திரங்களையும் கதைப்படி படைக்காமல் கோபம், வெட்கம், சந்தேகம், நம்பிக்கை எலல்லாவற்றையும் கலந்த சிக்கலான மனநிலையைக் கொண்ட தந்தை-மகன் உறவாகப் படைத்த விதத்தில் இயக்குனருக்கு ஒரு சல்யூட்!

முதல் பதினைந்து நிமிடங்களுக்கு பல கதாப்பாத்திரங்கள் அறிமுகமாவதால் கதையை ஃபாலோ பண்ண சிரமமாயிருந்திச்சு.. அதையும் தாண்டி ஃபாலோ பண்ணினால் இவர்களது accent காரணமாக இவர்கள் என் பேசுகிறார்கள் என்பதை பாதி வழியில் மிஸ் பண்ணவேண்டியிருந்தது. சப்-டைட்டில் கிடைத்தல் நலம்.. ஆனா 15 நிமிஷத்துக்கு படத்துக்குள்ளே நீங்களும் இழுத்துச் செல்லப்படுவீர்கள்! ஒரு சில க்ளிஷே காட்சிகள் போரடிக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அந்தக் குறைகளெல்லாம் கதையினதும், நடிப்பினதும் வீரியத்துக்கு முன்பு மறைந்து விடுகின்றன.

அமெரிக்கத் தயாரிப்பு இல்லை என்பதால் படம் நிறையப் பேர் பார்த்திருக்க முடியாது என்ற போதிலும், இதுவரைக்கும் பார்த்த யாருக்குமே படம் பிடிக்காமல் போகவில்லை.. ரொட்டன் டொமேட்டோஸில் 20 விமர்சனங்களின் அடிப்படையில் 100% உடனும், ஜ.எம்.டி.பியில் 2762 வாக்குகளின் அடிப்படையில் 7.1 ஸ்கோருடனும் இருக்கிறது.. மேலும் கார்டின் உட்பட பல பத்திரிகைகளிலும் 4 ஸ்டார் ரேட்டிங்கிற்கு குறையாமல் எடுத்திருக்கின்றமையானது, இம்மாதிரியான புதுமுக பிரிட்டிஷ் இயக்குனர்களுக்கு முன்மாதிரியாகவும், உந்துகோலாகவும் அமையலாம்.

படத்தை எந்த ஜோனர் ரசிகர்களுக்காக என்று தனித்து விடவும் முடியவில்லை. எல்லாரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. பார்த்துட்டு நீங்களும் கருத்தைப் பகிர்ந்துக்கோங்கோ!

ரேட்டிங்ஸ்,நடிப்பு = 18
இசை =14
கதை+திரைக்கதை = 16
கலை+ஒளிப்பதிவு =15
இயக்கம் = 18

மொத்தம் = 81% சூப்பர்!
Wild Bill (2011) on IMDb

41 comments:

  1. ஹாய் ... இந்த மாசம் ரொம்ப வெட்டியா இருக்கீங்க போல. :) கேம்பஸ் ஸ்ரைக் காரணமா?

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணுமில்லை. இந்த மாசம்தான் நெறைய புது படம் பார்க்க கிடைச்சுது நண்பன் ஒருவனின் தயவால்..

      * உங்க கதையைத்தான் வாசிச்சுக்கிட்டிருக்கேன்.. exciting!

      Delete
    2. ஏது கம்பஸ் ஸ்ரைக் காரணமா? என்னாணே நீங்க.. 1986இல் கம்பஸ்ல படிச்சவருக்கும், இப்போ நடக்கிற கம்பஸ் ஸ்ரைக்குக்கும் என்ன சம்மந்தம்? ஒரு வேளை ஏதும் கம்பஸ்ஸில் பியூனா இருக்கிறாரோ?

      Delete
    3. //ஒரு வேளை ஏதும் கம்பஸ்ஸில் பியூனா இருக்கிறாரோ?//
      ஏய்.. நீ படிக்கிற கம்பஸ்ல நான் ஹெட்மாஸ்டருடா!

      Delete
    4. அடச்சே! அப்போ கிழ போல்டு! :)

      Delete
  2. //எல்லாரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்..//
    அப்படிங்கிறீங்க??? கன்ஸிடர் பண்றேன். :-)

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நெசமாத்தான் சொல்றீங்களா?

      Delete
    2. கிசோகர்.. நீயும் கன்ஸிடர் பண்ணனும்.. உன்ன மாதிரி பசங்களைத்தான் அந்த ரெண்டாவது பையன் மூலமா இயக்குனர் உவமையா காட்டியிருக்காரு!

      Delete
    3. என்னய பத்தின கதைய நீயி இன்னும் விம்ர்சனமா போடல தம்பி! ஐ மீன் "எங்க வீட்டு பிள்ளை"

      Delete
  3. Movies Now , இலோ , HBO இலோ வந்தால்தான் நாங்ககெல்லாம் இங்கிலீசு படம் பாப்பம். எதற்கும் இந்த பெயரை இப்போதைக்கு குறித்துக்கொள்வோம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  4. இந்தப்படம் பார்க்கவில்லை நண்பா..
    குறித்து வைத்துக் கொள்கிறேன்.
    விரைவில் பார்த்துவிட்டு பகிர்ந்து கொள்கிறேன்.
    To Kill a Mockingbird, Godfather, Big Fish, Road to Perdition, Lion King, Finding Nemo இவை அனைத்தும் மிக அற்புதமான படங்கள்..

    ReplyDelete
    Replies
    1. அந்தப் படங்களை உதாரணத்துக்கு காட்டியிருக்கேனே தவிர அவற்றுடன் இதைக் காம்ப்பேர் பண்ணிவிடாதீர்கள் நண்பா.. அப்புறம் படம் சப்பையாகவே தெரியும்.. ஃப்ரெஷ் மைன்ட்டுடனேயே படம் பாருங்கள்!

      Delete
  5. சப்-டைட்டிலுடன் இந்தப் படத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் :-) அடுத்தடுத்து நிறைய படங்களை அறிமுகம் செய்கிறீர்கள்... எங்களுக்கு லிஸ்ட் பெருசாய்கிட்டே போகுது... ஆனாலும் பரவாயில்ல, இதே வேகம் இருக்கட்டும் :-)

    ReplyDelete
    Replies
    1. இதே வேகத்தில் அறிமுகப்படுத்த எனக்கும் ஆசைதான்.. முடியுமான்னுதான் டவுட்டாயிருக்கு..
      இந்தப் படத்தையும் லிஸ்டில் சேர்த்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா!

      Delete
  6. இப்போ கொஞ்சம் வெட்டியாக தான் இருக்கேன்.திரும்பவும் பிஸி ஆவதற்குள் பார்த்தாக வேண்டும்.கடந்த பத்து பதினைந்து நாட்களாக தினம் ஒரு ஆங்கில படம் என்று போகிறது.பாப்போம்.

    ReplyDelete
    Replies
    1. //கடந்த பத்து பதினைந்து நாட்களாக தினம் ஒரு ஆங்கில படம் என்று போகிறது//
      சூப்பர் ஷெட்யூல்.. எனக்கு வாரத்துக்கு 4 தான் தேறுது..
      படம் பார்த்து கருத்தையும் சொல்லுங்கள் நண்பா!

      Delete
  7. தம்பி உனக்கு என்ன ஆச்சு? படம் சுமார் தான் என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டு.. கடைசியில் சூப்பர் என்று 81 மார்க் கொடுத்திருக்கிறாயே?

    ReplyDelete
    Replies
    1. மேலே சொல்லயிருந்த படங்களுடன் ஒப்பிடும் போது சுமார்.. தனித்து நிற்கும் போது சூப்பர்!

      Delete
  8. அதாவது இந்த படம் எதை பற்றியது என்றால்... நம்ம ஜே,ஸட் புள்ளையாக இருந்த காலத்தில் அவரது அப்பவின் மனநிலையையும், அப்புறம் அவரு தகப்பனாக இருக்கின்ற இந்த காலத்தில் அவரது மகனின் மனநிலையையும் இது காட்டுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. இல்ல.. இல்ல.. அது lion King படமாக்கும்..

      இதுல 'ஜே.ஸட்' என்பதற்குப் பதிலாக கிஷோகர் என்று போட்டுக்கொண்டால் வைல்ட் பில் கதை வந்துரும்!

      Delete
  9. http://www.facebook.com/photo.php?fbid=467725843250483&set=a.144082318948172.19380.144080752281662&type=1&theater

    ReplyDelete
    Replies
    1. சர்வநாசம்!
      பரவால்லை.. அது யுரோப்பியன் பெஸ்டு பிளேயர்தானே.. வேர்ல்டுல பெஸ்டு நம்ம ரொனால்டோதான்னு பச்சப்புள்ளைக்கு கூட தெரியும்!

      Delete
    2. ஆமா பச்சபுள்ளைங்க தான் யாரு என்னத்த சொன்னாலும் நம்பும்!

      Delete
  10. நண்பா கிட்டத்தட்ட ஆறு பின்னூட்டங்களுக்கு மேல் போட்டுவிட்டேன், ஆனால் ஒன்று மட்டுமே திரையில் தெரிகிறது. பின்னூட்டத்தை போடுகையில் அவ்வப்போது எனது கணக்கு முடக்கப்பட்டதாகவும் செய்தி வந்து பீதியை கிளப்புகிறது. இந்த பின்னூட்டம் கூட உனது பிளாக்கில் தெரியுமோ தெரியாது. என்னை மன்னித்துவிடு ! நமது நட்புக்கு எவனோ சூனியம் வைத்துவிட்டான் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை இதுவாவது தப்பிச்சுக்கிச்சு! போய் எல்லாத்தையும் unspam பண்ணிவிட்டேன்!

      //நமது நட்புக்கு எவனோ சூனியம் வைத்துவிட்டான் என நினைக்கிறேன்.//
      கலைஞர் டி.வியில பொம்மாயி போகுதோ??

      Delete
    2. ///கலைஞர் டி.வியில பொம்மாயி போகுதோ??///

      எலேய் அது எல்லாமா பாக்குற நீயி?

      Delete
  11. நண்பா உங்க பழைய Inception ஸ்டைல சில பதிவுகள் எழுதுங்க நண்பா உண்மையிலே கலக்கல் தரமான பதிவுகள் அவை..

    ReplyDelete
    Replies
    1. அட.. அப்ப நீங்க அதை படிச்சிட்டீங்களா.. Inception மாதிரி விளக்கப்பதிவுகள் எழுத எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அதையே திருப்பி கன்டினியூ பண்ண நிகழ்தகவு கொஞ்சம் குறைவு..

      முதலாவது, சிலருக்கு கதையை முழுசா சொன்னா சஸ்பென்ஸ் போறதால பிடிக்காது..
      ரெண்டாவது, ரொம்ப கன்பியூஸிங்கான ஆங்கில சயன்ஸ் படம் எதுவும் புதுசா பார்க்கலை! :)
      *இருந்தாலும் உங்க ரிக்வெஸ்டை கன்ஸிடர் பண்றேன்..

      Delete
    2. போய் பாருங்க கமென்ட் கூட போட்ருக்கன்

      Delete
  12. தல,
    தமிழ்ல கூட நிறைய அப்பா-மகன் உறவை சொல்லி படம் வந்து இருக்கு.. தவமாய் தவமிருந்து. என்னை மிகவும் பாதித்த படம். வாரணம் ஆயிரம் கூட நல்ல படம் தான்.
    ஆனால் நீங்க அறிமுக படுத்தி இருக்கிற படம் நார்மல் அப்பா - மகன் உறவை பற்றியது இல்லை போல...ரேட்டிங் நல்லா இருக்கு. கண்டிப்பா பார்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாரணம் ஆயிரம் எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை..
      'தவமாய் தவமிருந்து' சேரன் தமிழுக்குத் தந்த பொக்கிஷம்!
      "சந்தோஷ் சுப்ரமணியம், எம்டன் மகன்"- இவற்றிலும் அப்பா-மகன் உறவு காட்டப்படும் விதம் எனக்கு பிடிக்கும்..

      Delete
  13. தல,
    எல்லா படத்தோட sub-title இந்த சைட்ல இருந்தது டவுன்லோட் பண்ணலாம்.
    http://www.opensubtitles.org
    எல்லா மொழி .srt file லும் கிடைக்கும்.

    ReplyDelete
  14. sucks i cannot read tamil

    ReplyDelete
  15. dont miss to see this movie fa meg pa for faen(turn me on damn it)

    my review here

    http://blogisdummy.blogspot.in/2012/09/fa-meg-pa-for-faen-turn-me-on-damn-it.html

    ReplyDelete
  16. Late ஆகிட்டேன்.. மன்னிக்கவும்.. புது படத்தையும் விட மாட்டேன்ன்றிங்க.. எப்படி நண்பா? நான் எல்லாம் நாலஞ்சு வருஷம் போய் தான் பாக்குறேன்.. Anyway nice review..

    ReplyDelete
  17. கண்டிப்பா பார்க்க வேண்டும் போல இருக்கு. படித்ததை பார்க்க ஒரு முறை சந்தர்ப்பம் கிடைத்தும்!!!!... படத்தை பற்றி தெரியாமல் போக.,பார்க்காமல் போன படம் இது.

    ReplyDelete

Related Posts with Thumbnails