Animators


Animation Companies

ஆங்கில அகரவரிசைப்படி (alphabetically ordered)



  AARDMAN Animation

ஆரம்பித்த வருடம் -1972
முதல் படம் - Chicken Run
சிறந்த படம் - Chicken Run
அனிமேஷன் ஆஸ்கர்கள் - 1

ஸ்டாப் மோஷன் அனிமேஷனுக்கு பெயர் போன கம்பெனி இவர்களுடையது..தடபுடலாக இல்லாவிட்டாலும், தரமான படங்களாக கொடுத்து மக்கள் நம்பிக்கையை வளர்த்து வருகின்றது!

இவர்கள் பற்றிய பதிவுகள்




BLUESKY Studios

ஆரம்பித்த வருடம் -1987
முதல் படம் - Ice Age
சிறந்த படம் - Rio

பிக்சார், ட்ரீம்வொர்க்ஸுக்கு அப்புறம் Best of the Rest கேட்டகரியில் முன்னுக்கு வருவது ப்ளூஸ்கைதான்! 'ஐஸ் ஏஜ்' படங்கள் மூலம் வசூலை அள்ளிக்குவிப்பதையும், அவற்றை வைத்துக்கொண்டு புதுவிதமான முயற்சிகள் எடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.. இதே தரத்தில் போனால் இன்னும் சில வருடங்களில் டாப் 2க்குள் வருவதற்கு சான்ஸ் அதிகம்!!
இவர்கள் பற்றிய பதிவுகள்






DISNEY Studios

ஆரம்பித்த வருடம் - 1923
முதல் படம் - Snow White and the seven dwarfs
சிறந்த படம் - The Lion King

அனிமேஷனுக்கு பிள்ளையார் சுழி போட்டதே இவங்கதான்.. 50கள்-90கள் வரை 2D படங்களாக கொட்டிக் குவித்து அசைக்கமுடியாத உச்சத்தில் இருந்தவர்கள், 3Dயின் வருகைக்கு பின்னர் ஆட்டங்கண்டு போய்விட்டார்கள்!! 'பழைய ஃபார்மை திருப்பி பிடிப்போம்' எனும் நம்பிக்கையில் வருடாவருடம் 2D, 3D படங்களுடன் களமிறங்குகிறார்கள்!

இவர்கள் பற்றிய பதிவுகள்





DREAMWORKS Animation

ஆரம்பித்த வருடம் - 1994
முதல் படம் - Antz
சிறந்த படம் - How to train your Dragon
அனிமேஷன் ஆஸ்கர்கள் -2

தற்போதைய அளவில், பிக்சாருக்கு அடுத்து எல்லாரும் ரெண்டாவது பெரிய தலையாக கொள்ளும் கம்பெனி இதுதான்.. பிக்சாரை விட வேகமாக ஒரு வருடத்துக்கு 2 படங்கள் என்ற வீதம் வெளியிடுவார்கள்.. ரேட்டிங்ஸ் அப்பப்போ குறைந்தாலும், கல்லா கட்டுவது மட்டும் குறையவே குறையாது!

இவர்கள் பற்றிய பதிவுகள்






 ILLUMINATION Entertainment

ஆரம்பித்த வருடம் - 2007
முதல் படம் - Despicable Me
சிறந்த படம் - Despicable Me

இங்கே உள்ள கம்பெனிகளிலேயே இளசு இதுதான்! முதல் படத்திலேயே அமோக வெற்றியையும் ரசிகர் கூட்டத்தையும் சம்பாதித்துக் கொண்டதால், தொடர்ந்து எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக துடிதுடிப்புடன் செயற்பட்டு வருகிறது!

இவர்கள் பற்றிய பதிவுகள்





 PIXAR Animations

ஆரம்பித்த வருடம் -1986
முதல் படம் - Toy Story
சிறந்த படம் - Ratatouille
அனிமேஷன் ஆஸ்கர்கள் - 6

அனிமேஷன் உலகின் முடிசூடா ராஜாவே பிக்சார்தான்! ஒவ்வொரு படத்திலும் அவ்வளவு நேர்த்தி.. Cars 2 தவிர எல்லாப் படமும் மெகா ஹிட்டுக்கள்.. எந்தப் படம் பெஸ்டுன்னே சொல்ல முடியாத அளவுக்கு உங்களை திணறடிக்கும்..

இவர்கள் பற்றிய பதிவுகள்






SONY Animations


ஆரம்பித்த வருடம் -2002
முதல் படம் - Open Season
சிறந்த படம் - Cloudy with a chance of Meatballs

'எல்லாத்துறையிலும் நான்தான் டாப்புல இருக்கனும்'ங்கற கொள்கையுடைய சோனியின் அனிமேஷனுக்கான கப்பல் இதுதான்! ஆரம்பம் சொதப்பலாக அமைந்தாலும், கூட்டு முயற்சிகளில் இறங்கி கொஞ்சம், கொஞ்சமாக துறையில் வளர்ந்து வருகிறது..

இவர்கள் பற்றிய பதிவுகள்

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails